புதுச்சேரி யூனியன் பிரதேசம் உருவான வரலாறு பகுதி 1-10
புதுச்சேரி மண்.
புரட்சி மூலம் மலர்ந்த மண்.
வரலாறுகள் பல படைத்தது.
வீரம் விளைந்த மண்.
இப்போது சோரம் போய் கிடக்கிறது.
டில்லி சுல்தான்களுக்கு அடிமைப் பட்டு கிடக்கிறது.
இதை மீட்டு எடுக்க, இன்னொரு விடுதலை போராட்டம் தேவைபடுகிறது.
பாரதி தாசன், அரவிந்தர், மக்கள் தலைவர், வ. சுப்பையா, ஆகியோர் வாழ்ந்து மறைந்த மண்.
ஆசியாவிலேயே எட்டு மணி நேர வேலை, இங்கு தான் நடைபெற்றது.
இளைஞர்களே! இந்த புதுவையின் வரலாறை நீங்கள் அறிய வேண்டும்.
முதலில், புரட்சி கவிஞர் பாரதிதாசன், கவிதை யோடு இந்த பதிவை ஆரம்பிக்கிறேன்.
- கொலை வாளினை எடடா, மிகு
கொடியோர் செயல் அறவே. - குகை வாழ் புலியே, உயர் குணம்
மேவிய தமிழா. - வலியோர், சிலர் எளியோர் தமை
வதையே, புரிகுவதா. - மகராசர்கள், உலகாளுதல் நிலையாம், எனும் நினைவா.
- உதவாதினி ஒரு தாமதம்,
உடனே விழி தமிழா.
என்ற, புரட்சி கவிஞனின் புரட்சி வரிகளுடன்,
இந்த புதுச்சேரி வரலாற்று பதிவு ஆரம்பம்.
அன்பார்ந்த நண்பர்களே!
நான் தினந்தோறும் பல பதிவுகளை பதிவிட்டு வருகிறேன்.
இவை யாவுமே கற்பனை அல்ல, நடந்தவை.
இதில் மாற்றம் பெறவும், விழிப்புணர்வு பெறவும், மக்கள் வாழ்க்கையில் ஏற்றம் பெறவுமே இந்த பதிவுகள்.
நமது புதுச்சேரி மண்ணின் வரலாறு படிக்க படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.
இதன் வரலாறு. விடுதலை வரலாறு.
யூனியன் பிரதேசமானது. அடிமை மாநிலமாக இருப்பது.
இதிலிருந்து விடுதலை பெறவே இத்தகைய விழிப்புணர்வு பதிவு.
பாண்டிச்சேரி வரலாறு.
- கிபி. ஒன்றாம் நூற்றாண்டில், பாண்டிச்சேரியில் சுமார் 3.2 கிமீ. தொலைவில் உள்ள அரிக்க மேடு வில் வியாபார வர்த்தக மையம் நடைபெற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- கிபி. 4 ஆம் நூற்றாண்டில், காஞ்சி பல்லவர்கள் ராஜ்யத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
- கிபி. 10 ஆம் நூற்றாண்டில், சோழர்களும்,
- கிபி 13 ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களும்,
- பிறகு விஜய நகர பேரரசர்களும்,
- இறுதியாக, பிஜப்பூர் சுல்தானிடம் சென்றபோது, செஞ்சி ராஜ்யத்தில் ஒரு பகுதியாக இது இருந்தது.
- 1674 ல் பிரெஞ்சு கிழக்கு இந்திய கம்பெனி வசம் சென்றது.
- 1693 ல் டச்சு காரர்கள் வசம் சென்றது.
- 1699 ல் பிரான்ஸ் வசம் சென்றது.
- 1720, 1731. 1738 ஆண்டுகளில். காரைக்கால், மாஹே, ஏனாம், ஆகிய பகுதிகளை கைப்பற்றினர்.
- 1742 முதல் 1763 வரை, அடிக்கடி கைமாறியது.
- 1763 ல் பாரீஸ் உடன்படிக்கை படி பிரான்ஸ் வசம் சென்றது.
- 1793 ல் மீண்டும் ஆங்கிலேயர் வசம் சென்றது.
- 1814 ல் மீண்டும் பிரான்ஸ் இடமே திருப்பி தந்தனர்.
- 1947 ல் இந்தியா சுதந்திரம் அடைந்தாலும் பாண்டிச்சேரிக்கு சுதந்திரம் கிடைக்க வில்லை.
இதற்காக ஏழு ஆண்டுகால விடுதலை போராட்டம் நடந்தது.
- 1954 ல் பிரெஞ்சு அரசு பாண்டிச்சேரியை ஒப்பந்தம் போட்டு ஒப்படைத்தது.
- 1814 லில் இருந்து 1954 வரை பிரெஞ்சு அரசே நிர்வகித்தது.
இதன் ஐந்து பகுதிகளான பாண்டிச்சேரி, காரைக்கால், மாஹெ, ஏனாம், சந்திர நாகூர், ஆகிய பகுதிகள்.
அடுத்து, யூனியன் பிரதேசமானது எப்படி?
இந்தியாவில், 1950 களில், மாநிலங்கள் நான்கு வகையாக பிரிக்கப்பட்டன.
- ஒன்று. பிரிட்டிஷ் கவர்னர் ஆட்சி நடத்தியது.
- இரண்டு. அரசர்கள் மற்றும் குறுநில மன்னர்கள்.
- மூன்று. தலைமை ஆணையர்கள் மற்றும் குறு நில மன்னர்கள்.
- நான்கு. துணை நிலை ஆளுநர். இப்படியாக இருந்தது.
1954 ல் மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டன.
இதில், மொழிவாரிக்காகவும், நிர்வாகம் தனித்தன்மை செயல்படவும்.
- பொருளாதாரம், நிர்வாகம், அரசியல். இவற்றில் நிலைத்த தன்மை கொண்டவை, மாநிலங்களாகவும்,
- பொருளாதாரம், நிர்வாகம், அரசியல் நிலையற்ற தன்மை உள்ளவை யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டன.
1954 ல், புதுச்சேரி இந்திய அரசுடன், ஒப்பந்த அடிப்படையில் இணைந்தது.
1956 ல், இந்திய அரசுக்கும், பிரெஞ்சு அரசுக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டது.
இந்த ஒப்பந்தத்தில் மொத்தம் 31 சரத்துக்கள் அடங்கியுள்ளன.
இதில்,
- பத்தாவது சரத்தில், புதுச்சேரி நிர்வாக செலவீனங்கள், அரசு ஊழியர் ஓய்வூதியம், ஆகியன முழு மான்யம் வழங்க வேண்டும் என தெளிவாக கூறப்பட்டுள்ளது.
- மேலும் 30 வது சரத்தில், இந்த ஒப்பந்தத்தை மீறினாலோ, அதன்படி நடந்து கொள்ளாவிட்டாலோ, நீதிமன்றத்தில் முறையிடலாம் என்றும், நீதி மன்றம் காலதாமதப் படுத்துமேயானால், சர்வதேச நீதிமன்றத்தில் முறையிடலாம், என கூறப்பட்டுள்ளது.
- மேலும், பஞ்சாலைகளை சீரமைக்க இந்திய அரசு நிதி உதவிட வேண்டும் எனவும், மாநிலத்தில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமானால், மக்களிடம் கருத்து கேட்பு நடத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இந்த ஒப்பந்தப்படி இந்திய அரசு 100 சதவீத மான்யம் அளித்து வந்தது.
- புதுச்சேரியில் இருந்து வெளியேற, பிரஞ்சு அரசு, பத்து ஆண்டுகள்கால அவகாசம் கேட்டது.
- இருப்பினும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது 1962 ம் ஆண்டு வெளியேறியது.
அதன் அடிப்படையில்.
1962 ஆம் ஆண்டு புதுச்சேரி யூனியன் பிரதேசமானது.
பிறகு, இந்திய அரசு சில யூனியன் பிரதேசங்களுக்கு மாநில தகுதி அளித்தது.
- இமாச்சலப் பிரதேசம், 1971 ம் ஆண்டிலும்.
- மணிப்பூர் 1972 ம் ஆண்டிலும்.
மாநில தகுதி பெற்றது.
அப்போது புதுச்சேரி சட்டமன்றத்தில் இதை மேற்கோள் காட்டி, மாநில தகுதி கேட்டு தீர்மானம் போட்டது.
ஆனால். நடந்தது என்ன?
- புதுச்சேரிக்கு தொடர்ந்து மாநில தகுதி கோரிக்கை புறக்கணிக்க பட்டது.
- டில்லியில் உள்ள சில கட்சிகள், தங்கள் கட்டுப்பாட்டில் புதுச்சேரியை வைத்து இருக்கவே விரும்பின.
- புதுச்சேரி அரசு ஊழியர்களும், அப்போது இந்த கோரிக்கையை விரும்பவில்லை.
- மத்திய அரசு தரும் நிதி குறைவாக போய் விடும் என்ற அச்சமே.
- கம்யூனிஸ்டுகள் மட்டுமே இதில் தீவிரம் காட்டினர்.
இதற்கு பிறகு.
- 1972 ல், திரிபுராவும்.
- 1963 ல். நாகாலாந்தும்.
- 1987 ல். கோவா, அருனாசலபிரதேசம், மற்றும் மிஜோராமும் மாநில தகுதி பெற்றன.
ஆனால் புதுச்சேரிக்கு மட்டும் கிடைக்க வில்லை. இதற்கு முக்கிய காரணம். புதுச்சேரியை யாருமே முக்கிய மாநிலமாக கருதவில்லை.
தமிழகம் மற்றும் டில்லியில் உள்ள, கட்சிகளின் ஆளுமையின் கீழ் வந்ததால்தான் இந்த வினை.
புதுச்சேரி மாநில நலனிலும், மக்கள் நலனிலும் அக்கறை கொண்ட ஒரு சிலரால் மட்டுமே, இந்த கோரிக்கைக்கு உயிர் இருந்து கொண்டு இருக்கிறது.
சரி, யூனியன் பிரதேசங்கள் நிலையை பார்ப்போம்.
- இந்தியாவில் மொத்தம் 28 மாநிலங்கள் உள்ளன.
- 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளன.
- இப்போது உள்ள 8 யூனியன் பிரதேசங்கள்.
- டில்லி.
- புதுச்சேரி.
- அந்த மான் நிக்கோபார் தீவுகள்.
- சண்டிகார்.
- தாத்ரா நகர்.
- ஹவேலி மற்றும தாமன் தையு.
- ஜம்மு காஷ்மீர் லடாக்.
- லட்சத்தீவுகள்.
யூனியன் பிரதேசங்களில் மிகக் குறைவான மக்கள் தொகை கொண்டது, லட்சத்தீவு, 64,473.
அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம். டில்லி, 1,67,87,941.
- 1963 வரை மத்திய அரசு, புதுவைக்கு, பிரெஞ்சு இந்திய ஒப்பந்தபடி. 100 சதவீத மான்யம் வழங்கி வந்தது.
- 1964 ம் சட்ட திருத்தல் படி, 90 சதவீதம் ஆனது.
- புதுச்சேரியில் அப்போது வளர்ச்சி திட்டங்களும், மத்திய அரசின் உதவிகளும் தாராளமாக கிடைத்தன.
- அந்த கால கட்டத்தில், புதுச்சேரி செல்லக் குழந்தை போல, பராமரிக்கப்பட்டது.
- இந்த எட்டு யூனியன் பிரதேசங்களில். டில்லி யும், புதுச்சேரி மட்டுமே சட்டமன்றங்களால் இயங்க கூடியவை.
- தற்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதசமாகி இதனுடன் இணைந்து, தற்போது மூன்று சட்டமன்ற யூனியன் பிரதேசங்கள் உள்ளன.
- மீதி ஐந்தும் சட்ட மன்றம் இல்லாத, யூனியன் பிரதேசங்கள்.
மாநிலங்களில் இருந்து, யூனியன் பிரதேசங்கள் எவ்வாறு வேறுபடுகின்றன?
மாநிலங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் கொடுக்கப்பட்டு, அவை தனித்தன்மையுடன் இயங்க கூடிய அதிகாரத்தை, இந்திய ஒன்றிய அரசு அளிக்கிறது.
காரணம், பொருளாதாரம்,அரசியல்,நிர்வாகம், ஆகியவற்றில் அவை முன்னேற்றம் அடைந்து இருப்பதால்,இந்த தன்னாட்சி அதிகாரத்தை அளிக்கிறது.
ஆனால், யூனியன் பிரதேசங்களுக்கு இந்த அதிகாரங்கள் இல்லை.
அவை பொருளாதாரம், அரசியல், நிர்வாகம், ஆகியவற்றில் மிகவும் பின் தங்கி இருப்பதால்.
மத்திய அரசின் நேரடி பார்வையில், நிதியுதவியுடன் இயங்குகின்றன.
இந்த பொருளாதாரம்,அரசியல், நிர்வாகம், ஆகியவற்றில் எப்போது நிலைத்தன்மை ஏற்படுகிறதோ, அப்போது, இதற்கு மாநில தகுதி கிடைத்து விடும்.
இதற்கான பணிகளை, இந்திய புள்ளியல் துறை கணக்கெடுப்பின்படி, மத்திய அரசு கண்காணிக்கும்.
இதில், வறுமைக் கோடு ஒழிப்பு, உள்நாட்டு உற்பத்தி, வரி வருவாய், மக்கள் தொகை, ஆகியன கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
மத்திய உள்துறை அமைச்சர் தான் இந்த யூனியன் பிரதேசங்களுக்கு நிர்வாகியாக இருப்பார்.
நிதி ஆயோக் அமைப்பு, இந்த யூனியன் பிரதேசங்களுக்கான நிதியை ஒதுக்கும்.
இதில், புதுச்சேரிக்கு நிதி குறைவாக ஒதுக்கீடு செய்ய முக்கிய காரணம்.
அனைத்திலும், முதன்மை யூனியன் பிரதேசமாக வளர்ச்சியடைந்த யூனியன் பிரதேசமாக முதலிடத்தில் இருப்பதால்தான். வளர்ச்சி குறைவாக உள்ள யூனியன் பிரதேசங்களுக்கு அதிக நிதி அளிக்கப்படுகிறது.
உதாரணமாக.
அந்தமான் நிக்கோபார் தீவு களுக்கு, 2016..2017 ம் ஆண்டில், 4087 கோடியும். முதலீடு தொகையாக 683.68 கோடி அளிக்க பட்டுள்ளது.
ஆனால் புதுச்சேரிக்கு, சுமார். 1700 கோடி மட்டுமே அளிக்கிறது.
- அந்தமான் மக்கள் தொகை. 351087.
- பரப்பளவு. 8249 சதுர கிமீ.
- இதன் வரி வருவாய். 88.26 கோடி ரூபாய்,
- வரி இல்லாத வருவாய். 278.88 கோடி ரூபாய்.
அதாவது மத்திய அரசு இந்த யூனியன் பிரதேசங்களுக்கு தேவையான நிதியை அதிகளவு அளிக்கிறது.
புதுச்சேரி வளர்ச்சி அடைந்த யூனியன் பிரதேசமாக கருத்தில் கொள்வதோடு.
இது சட்டமன்றம் உள்ள யூனியனாக கருதி.
மிகக் குறைவான நிதியை தருகிறது.
ஒரு புறம் கடன் சுமை அதிகரிக்கவும்.
மறுபுறம் உள்நாட்டு உற்பத்தி குறையவும்.
மத்திய அரசின் நிதி குறையவும். கடும் நிதிப்பற்றாக்குறையில் புதுச்சேரி மாநிலம் தவிக்கிறது.
சட்டமன்றம் இல்லாத யூனியனாக அந்தமான் நிக்கோபார் தீவுகளை போல் இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.
இந்த நிதிப்பற்றாக்குறை என்பது திடீரென ஏற்படவில்லை.
1977 ல் இருந்து இது தோன்றியது.
அப்போதே இதற்கு வேகத்தடை போட்டு இருந்தால்.
இந்த அவலநிலை நமது மாநிலத்திற்கு ஏற்பட்டு இருக்காது.
புதுச்சேரியை தமிழகத்துடன் இணைக்க முற்பட்டது. தமிழத்தை ஆளும் கட்சி, புதுச்சேரியில் தோல்வியடைந்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
மத்திய அமைச்சரவையில் இடம் பெற்ற இருந்ததால், அப்போதைய பிரதமரிடம், புதுச்சேரியை, தமிழகத்துடன் இணைக்க வற்புறுத்தியது.
மத்திய அரசும் இதை ஒப்புக் கொண்டது. ஆனால், புதுச்சேரி இணைப்பு எதிர்ப்பு போராட்டத்தை ஒன்று பட்டு நடைபெற்றது.
இதில் பெருமளவு, வியாபாரிகள், தொழிலாளர்கள் இருந்தாலும், அரசு ஊழியர்கள் முழு ஆதரவு அளித்தது மிகப்பெரிய பலம். இதற்கு அரசு ஊழியர்கள் ஆதரவு தெரிவித்ததற்கு, அவர்களது சுயநலமும் ஒரு காரணம்.
எப்படியோ இணைப்பு எதிர்ப்பு. போராட்டம், மிகப்பெரிய வெற்றி கிடைத்தது.
மத்திய அரசு தனது முடிவை கை விட்டாலும், மறு பக்கம் நமக்கு மிகப்பெரிய ஆப்பு வைத்தது.
ஆம். ஏற்கனவே 100 சதவீத மானியத்தில் இருந்து, 10 சதவீதம் குறைத்து, 90 சதவீதம் வழங்கிய மத்திய அரசு, அதை மேலும், 20 சதவீதம் குறைத்து, 70 சதவீதமாக ஆக்கியது.
இப்போது இருக்கும் இந்த விழிப்புணர்வு, அப்போது யாருக்கும் இல்லை.
இணைப்பு எதிர்ப்பு போராட்ட வெற்றியில் வந்த, பேராபத்தை யாரும் கண்டு கொள்ளவில்லை.
இந்த 70 சதவீத மானியத்தில் கூட, ஓரளவு புதுச்சேரி வளர்ச்சி பாதையை நோக்கி நடை போட்டு வந்தது.
அடிக்கடி தேர்தல் நேரங்களில், மாநில தகுதி பற்றியும், பஞ்சாயத்து தேர்தல் பற்றியும் பரபரப்பாக பேசப்படும்.
தேர்தல் முடிந்த பிறகு, மூட்டை கட்டி பரனில் போட்டு விடுவர்.
மாநில உரிமை பற்றி பேச எவரும் இல்லை.
2004 ல் சுணாமி வந்தது.
மத்திய அரசின் ரூ 250 கோடி நிதியும் வந்தது.
இது நமது ஆட்சியாளர்களுக்கு காமதேனுவாக அமைந்தது. சுனாமி பணமாக மாறி விட, மத்திய அரசு விளக்கம் கேட்டது.
புதுச்சேரியின் நல்ல காலம், அப்போது பொருளாதார பேராசிரியர், மு. ராமதாஸ் அவர்கள், பாராளுமன்றத்துக்கு எம் பி யாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார்.
அதிலிருந்து மாநில தகுதி விவகாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.
மத்திய அரசு, சுனாமி கணக்கை கேட்டு புதுச்சேரி அரசை நெருக்க, அரசு திக்கு முக்காடியது.
ஒன்று சரியாக கணக்கு கொடுங்கள், இல்லை தனிக் கணக்கு ஆரம்பித்து கொள்ளுங்கள் என்றது.
அந்த நேரம் தப்பித்தால் போதும் என்று, மாநில நலனையும், மாநில வளர்ச்சியையும் கருதாமல், தான் தப்பித்து கொள்ள, மத்திய அரசின் வலையில் தான் சிக்கிய தோடு புதுச்சேரியையும் சிக்க வைத்தனர்.
அதன் விளைவாக மத்திய அரசு 70 சதவீதம் மான்யம் 30 சதவீதமாக மாறியது.
கொடுமையிலும் கொடுமை.
அப்போது தான் அந்த அதிசயம் நடந்தது.
ஆம் 37 வருடங்களுக்கு பிறகு, திரு. பேராசிரியர். மு. ராமதாஸ், எம் பி அவர்களின் பெரு முயற்சியால், உள்ளாட்சி தேர்தல் நடந்தது.
மாநில தகுதி விழிப்புணர்வு பிரச்சாரம், அதன் முக்கியத்துவம், பேராசிரியராலும், கம்யூனிஸ்டுகளும், பேராசிரியர். திரு, வேல்முருகன் பழனியப்பன், சண்முகம் அவர்கள் அப்போது சிறிய புத்தகத்தையும் வெளியிட்டார். ஆனால், அதன் மீது தொடர் நடவடிக்கை இல்லை.
மாநில தகுதி பிரச்சினை என்பது, அவ்வப்போது ஊறுகாய் போல, அரசியல் கட்சிகளால் பயன்படுத்தும் போலி வாக்குறுதியாகும்.
மக்களும் இதன் முக்கியத்துவத்தை உணர்வதில்லை.
.
2011 மற்றும் 2016 ஆட்சியில், புதுச்சேரி நிதிப்பற்றாக்குறையில் தள்ளாடியது.
உதாரணமாக. ஆண்டு இறுதியில், இலவச மிக்ஸி கிரைண்டர் வழங்கும் விஷயத்தில், ஒரு துக்ளக் நடவடிக்கை நடந்தது. அமுதசுரபி மூலம் இந்த கொள்முதல் நடந்தது. இதற்காக,
- சாராய ஆலை நிறுவனத்திடம் 15 கோடியும்.
- பவர் கார்ப்பரேஷனிடம் 30 கோடியும் அமுத சுரபி க்கு வழங்கப்பட்டது.
இன்று அமுதசுரபி நலிவடைய இது ஒரு முக்கிய காரணமாகும்.
2007 ல் தணிக்கணக்கு ஆரம்பித்த போது, நமது தலையில் மத்திய அரசு 2200 கோடி கடனை சுமத்தியது.
அதிலிருந்து கடன் வாங்கி வாங்கி, அதற்கு வட்டி கட்டி கடனும் அதிகமானது. வரும் வரி வருவாயும், சம்பளத்துக்கும், பென்ஷனுக்கும், வாங்கிய கடனுக்கு அசலையும் வட்டியும் திருப்பி செலுத்தவே சரியாக இருந்தது.
புதுச்சேரிக்கு இவ்வளவு செயற்கை நெருக்கடடிகளை கொடுத்த மத்தியில் இருந்த ஆளும் கட்சி,
புதுச்சேரியில் ஆட்சியை பிடிக்க திட்டம் வகுத்தது.
அதன்படி 2016 தேர்தலில், மூன்று முக்கிய வாக்குறுதிகளை அளித்தது.
- சுணாமி ஊழல் விசாரணை நடத்தப்படும்.
- 4000 பேருக்கு மேல் கொல்லைப்புற நியமனங்கள், விசாரணை மேற்கொள்ள படும்.
- அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும், இலவசமாக, 30 கிலோ அரிசியும், 5 கிலோ கோதுமையும், வழங்கப்படும்…
இத்துடன், மேலும் 48 வாக்குறுதிகள், இதை நம்பி மக்கள் வாக்களித்தனர். ஆனால், இதில் எதுவுமே நடக்கவில்லை.
இந்த ஜந்து ஆண்டிலும், எந்த வளர்ச்சியும் இல்லை. எந்த முன்னேற்றமும் இல்லை இல்லவேயில்லை.
அனைத்து பிரச்னைகளுக்கு காரணம், ஆளுநர் என கையை காட்டி, சொந்தமான அரசியலில் நாற்பது ஆண்டு அனுபவ சொந்தகாரர் தப்பித்து கொண்டு, புதுச்சேரி மாநிலத்தை சீரழிவு பாதைக்கு தள்ளினர்.
கடந்த ஐந்து ஆண்டு சீரழிவுக்கு, ஆளுநர் கிரண்பேடியும், நாராயணசாமியும், எதிர்க்கட்சிகளும், ஊடகங்களுமே, உடந்தையாக இருந்த உயர் அதிகாரிகளுமே, கூட்டுப் பொறுப்பு.
அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்தவர், பல மிரட்டல்களுக்கு பயந்து மவுன விரதம் காத்தார்.
மத்தியில் ஆட்சி மாறியதும் அவருக்கு ஆதரவுக் கரம் நீட்டியது.
கடந்த ஐந்து ஆண்டுகள் ஆட்சியில், என்ன நடந்தது தெரியுமா?
கடந்த ஐந்து ஆண்டுகள் ஆட்சி என்பது, ஏறக்குறைய திவாலான அரசாகவே செயல்பட்டது.
- வாக்குறுதிகள் அனைத்தும் மூட்டை கட்டப்பட்டது.
- தேய்ந்து போன ரிக்கார்டு போல, அனைத்துக்கும் நிதிப்பற்றாக்குறை என்ற காரணம் காட்டப்பட்டது.
- மக்கள் எதிர்பார்ப்புக்கு எதிராக, அனைத்து நடவடிக்கைகளும் இருந்தன.
- எதிர்க்கட்சி தலைவர், மவுனமானார்.
- ஆதரவு கட்சிகள், அமைதி காத்தன.
- ஊடகங்கள், கண்டு கொள்ள வில்லை.
- சமூக ஆர்வலர்களும், மக்கள் இயக்க அமைப்புகளும், மட்டுமே போராட்டங்கள் நடத்தின.
- பஞ்சாலை கள் மூடப்பட்டன.
- ரேஷன் கடைகள் இயங்கவில்லை.
- அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப வில்லை.
- கூட்டுறவு அழிந்தே போனது.
- பாரம்பரிய தொழில்கள் நலிவடைந்து போயின.
- பல அரசு சார்பு நிறுவனங்கள்.
- கூட்டுறவு நிறுவனங்கள் இயங்கவில்லை.
- பல மாதங்கள் சம்பளம் இல்லை.
- மக்கள் நல திட்டங்கள் முடக்கப்பட்டன.
அனைத்துக்கும் காரணம், கிரண்பேடி என சொல்லி, ஆட்சி இறுதி காலத்தில், திரு.நாராயணசாமி நடத்திய போராட்டம் மிகவும் கேலிக்குரிய நிகழ்வாக அமைந்தது.
ஆனால்,
- ஆட்சிக்கு வந்த போது இருந்த கடன், 6400 கோடியில் இருந்து 9449 கோடி கடனானது.
- அவரது ஆட்சி நடத்திய விதமானது, பாஜகவை மக்கள் ஆதரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
- புதுச்சேரியை, 30 ஆண்டு பின்னுக்கு தள்ளிய பெருமை, திருவாளர் நாராயணசாமிக்கும், இரும்பு பெண்மணி கிரண்பேடிக்கும் உண்டு.
- இந்த இருவரையும் புதுச்சேரி மக்கள் எந்த காலத்திலும் மறக்க மாட்டார்கள்.
இன்னும் நாராயணசாமி அவர்கள் காங்கிரஸில் இருப்பது, அந்த கட்சிக்கு நிச்சயம் எதிர்காலத்தை தராது.
நடந்து முடிந்த தேர்தலில், விடாது, அடாது பெய்த பணமழையால், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதம் இல்லாமல் அளித்ததில், கடந்த கால ஆட்சி எதிர்ப்பில், புதிய ஆட்சி வந்தது.
நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில், அனைத்து கட்சிகளும், வாக்குறுதிகளை வாரி வழங்கின.
வழக்கம் போல மாநில அந்தஸ்து கோரிக்கையும், பஞ்சாயத்து, தேர்தலும் முக்கிய இடத்தை பிடித்தது.
இதற்கு முக்கிய காரணம், புதுச்சேரியில் அப்போது புதிய இயக்கம் தோன்றியது.
அது புதுச்சேரி மக்கள் இயக்கம்.
அதில், வியாபாரிகள், கல்வியாளர்கள், அறிவு ஜீவிகள், வழக்கறிஞர்கள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், தொழிலாளர்கள், ஒன்று பட்டு, மக்கள் இயக்கத்தின் சார்பில் மாநாடு நடத்தப்பட்டது.
மாநில அந்தஸ்து கோரிக்கையை, அந்த மாநாடு வலியுறுத்தியது. அதனால், மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
அந்த இயக்கத்துடன், அனைத்து கட்சிகளுக்கும், புதுச்சேரி வளர்ச்சிக்கான 82 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தது.
இதன் ஒருங்கிணைப்பாளர் திரு. தாமோதரன்.
இணை ஒருங்கிணைப்பாளர்கள், திரு ப. சங்கரன், திரு ரவி சீனுவாசன். ஆகியோரும். இந்த இயக்கத்தை முன்னின்று நடத்தியதில் குறிப்பிடத்தக்கவர்கள்.
புதிய ஆட்சி மிகுந்த சிரமத்துக்கு இடையே பதவி ஏற்றது.
ராஜ்யசபா உறுப்பினர் பதவியில் இருந்து, மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வரை, ஒரு மவுன யுத்தமே நடைபெற்றது.
கொராணா கொடுமையில் மக்கள், இதை கண்டு கொள்ளவில்லை.
தமிழகத்தில் ஆட்சி வேக செயல்பாடு புதுச்சேரி அரசை சிக்கலுக்கு உள்ளாக்கியது.
இலாகா பிரிப்பதில் சிக்கல்.
32 துறைகளில், 16 துறைகளை, முதல்வரே வைத்து கொண்டார்.
கூட்டணி கட்சிக்கு, வெறும் ஐந்து துறைகளே ஒதுக்கப்பட்டன.
இந்த புகைச்சல் அடங்குவதற்கு முன்பு பஞ்சாயத்து தேர்தல் வந்தது.
சட்டசபையில் முதல்வர் அறிவித்த பல திட்டங்கள், அப்படியே அந்தரத்தில் தொங்கின. அதிகாரிகள் அவற்றை மதிக்கவில்லை.
முதல்வர் ஒரு பக்கம், கூடுதல் பொறுப்பு வகிக்கும் ஆளுநர் மறுப்பக்கம்.
தீபாவளிக்கு, அறிவிக்கப்பட்ட இலவச அரிசி, மற்றும் இரண்டு கிலோ சர்க்கரை வழங்க, கால தாமதமானது.
பஞ்சாயத்து தேர்தலை தள்ளிப் போட, அனைவருமே ஒன்று கூடினர்.
நீதிமன்றத்தை நாடி, உத்தரவும் பெற்றனர்.
இடையில், மத்திய அரசு, திடீரென பெட்ரோல் டீசல் விலையை குறைத்தனர். ஏற்கனவே நிதிப்பற்றாக்குறை, இதில் இது வேறு.
வவுச்சர் ஊழியர்களுக்கு 10,000 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்த திட்டம், அமலாகாமல் இருக்க, அந்த ஊழியர்கள். தலைமை செயலரை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.
இடையில் கனமழை, வெள்ளம் ரோடுகள் குண்டும் குழியுமாக, மக்கள் அவதிப்பட, முதல்வரின் அதிரடி அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பகுதி-10
மழைக்கால நிவாரணமாக, 5000 ரூபாய் அறிவித்தது. அந்த அறிவிப்பு, அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. ஆனால், சட்டியில் ஒன்றும் இல்லை.
முதல்வரின் எதிர்ப்பு, சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் தலைமை செயலரை நோக்கி இருந்தது. மற்றும், கூட்டணிக்குள் மோதல், அதிகாரிகளுக்குள் மோதல், இப்படியாக, குண்டு சுவற்றுக்குள்ளே குதிரையாட்டம் ஆடினால், எப்படி?
முதல்வர் என்ன செய்து இருக்க வேண்டும்?
டில்லி சென்று, பிரதமரை, உள்துறை அமைச்சரை, நிதியமைச்சரை சந்தித்து பேசியிருக்க வேண்டும்.
புதுச்சேரி நிலைமையை விளக்கி, இந்த பிரச்னைகளுக்கு முடிவு கட்டியிருக்க வேண்டும்.
அவ்வப்போது மக்களுக்கு நாக்கில் தேனை தடவுவது. கடைசியில் ஏமாற்றத்தை அளிப்பது, ஒரு நல்ல ஆட்சியாளர்களுக்கு நல்ல தல்ல.
மக்கள் முதல்வர், செய்ய வேண்டியது என்ன?
- தனக்காக ஓதிக்கிகொண்ட பல துறைகளை, மற்ற மற்ற அமைச்சர்களுக்கு பிரித்து தர வேண்டும்.
- அமைச்சரவையை கூட்டத்தை உடனடியாக கூட்டி விவாதிக்க வேண்டும்.
- டில்லி சென்று, நிதிப்பற்றாக்குறை போக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பொருளாதார வல்லுநர்கள் அடங்கிய வளர்ச்சி குழு அமைக்க வேண்டும்.
- தொழில் நுட்ப வல்லுநர்கள் அடங்கிய தொழில் வளர்ச்சி குழு அமைக்க வேண்டும்.
- கூட்டுறவு ஆலோசனைக் குழு அமைக்க வேண்டும்…
- அனைத்து கட்சி தலைவர்களையும் கூட்டி பேசி, இனியும் நீதிமன்றம் செல்லாமல், உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்.
- குண்டும் குழியுமான சாலைகளை போர்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.
- அரசு சார்பு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், சர்க்கரை ஆலைகள், பஞ்சாலைகள் சரி செய்வதோடு அரசு துறை காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும்.
- நிலுவையில் உள்ளசம்பளத்தை உடனே வழங்க வேண்டும்.
இது போன்ற பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்துதீர்த்து வைக்க வேண்டும்.
அறிவிப்பு வெளியிடுவதற்கு முன், அனைத்து உயர் அதிகாரிகளிடமும் கலந்து பேசி, வெளியிடுவதோடு அரசாணையோடு வர உறுதி செய்யவேண்டும்.
மக்கள் நம்பிக்கை பெறுகின்ற அரசாக இது இருக்கவேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பு.
சமூக அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், மக்கள் இயக்க அமைப்புகளும் இதைத்தான் விரும்புகின்றன.
அழகு மிகு புதுச்சேரி, இப்படி பாழ் பட்டு கிடைக்கிறது.
அதை சீரமைக்க அனைவரும் ஒன்று பட்டால் ஒழிய, இதற்கு வேறு விமோசனம் கிடையாது.
இப்போதைய அரசியலில், விஷக் காற்று கலந்து விட்டது.
- ரியல் எஸ்டேட் மாபியா க்கள்.
- மதுபான கடை மாபியா க்கள்.
- கிரிமினல்கள். அரசியலில் இரண்டறக்கலந்து முழு ஆதிக்கம் செலுத்த தொடங்கி விட்டனர்.
இது எங்கு கொண்டு போய் விடுமோ, என்ற அச்சம் நிலவுகிறது.
இந்த கும்பலுக்கு அஞ்சி அடங்கி கிடப்பது மக்கள் மட்டுமல்ல, அரசியல் கட்சிகளும் தான்.
இது, நல்ல வளர்ச்சி பாதைக்கான அறிகுறி அல்ல.
இதை, வளர விட்டால் எதிர்காலத்தில் பேராபத்தாய் முடியும்.
இதை, இப்போதே கிள்ளி எறிய வேண்டும்.
இதை செய்ய இளைஞர்கள் கிளர்ந்து எழ வேண்டும்.
பணம் தான் அனைத்தையும் முடிவு செய்யும் என்றால்.
நல்லவர்கள் இங்கு நிம்மதியாக, வாழ முடியாது.
இளைஞர்களே.
இதற்கு ஒரு சரியான முடிவை உங்களால் மட்டுமே எடுக்க முடியும், இந்த ஆதிக்க சக்திகளின் ஆணி வேர்களை, உங்களால் மட்டுமே பிடுங்கி எரிய முடியும்.
இந்த பதிவானது, புதுச்சேரி யூனியன் பிரதேசம் உருவான வரலாறு பற்றியது. இது முதலில், அரிக்க மேடு வில் ஆரம்பித்தது.
இறுதியில், அகதி மாநிலமாக, மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்த தற்போது, அவல நிலையில் உள்ளது.
உரிமைகளை உரக்க பேச ஆட்கள் இல்லை. அனைவருக்குமே மடியில் கணம் உள்ளது.
மத்திய அரசே, பிரெஞ்சு இந்திய ஒப்பந்தத்தை மீறாதே, என்ற கோஷத்தை எழுப்பினால் போதும். அனைத்து பிரச்னைகளும் தானாக தீர்ந்து விடும். அல்லது, ஒதுங்கி நல்லவர்களுக்கு வழிவிட்டாலாவது நல்லது நடக்கும்.
அல்லது, நல்லவர்களை உடன் வைத்து கொண்டு, ஆலோசனை பெற்று, அதன்படி நடந்தாலாவது நல்லது நடக்கும்.
இப்படி எதுவுமே செய்யாமல், அவ்வப்போது மக்களுக்கு நாக்கில் தேனை தடவினால், அது ஆரோக்கியமான அரசியலுக்கு நல்லதல்ல. வளர்ச்சியும் அல்ல. வீக்கம் பெரிதாக பெரிதாக அறுவை சிகிச்சை செய்து தான் அகற்ற வேண்டும். அது பேராபத்தில் தான் முடியும்.
நாம் ஒன்றும் கடவுள் அவதாரம் அல்ல.
அண்டிப்பிழைக்கும் சில ஜென்மங்கள், ஏதாவது புகழ்ந்து கொண்டு தான் இருக்கும்.
தனிநபர் துதிபாடிகள், மாலை மரியாதைகள், நடக்கும், இதற்கு மயங்கி விடக்கூடாது.
அல்லக்கைகளும், அளப்பறைகளும், நிரந்தரமானதல்ல.
மக்கள் நலமும், மக்களின் வாழ்த்துக்களும் மட்டுமே நிரந்தரமானவை.
உங்களை பல நூறாண்டு வாழவைக்கும்.
ஆட்சியாளர்கள் இதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
புதுச்சேரி பெருமக்களே!
உங்களை இப்போது ஒரு கற்பனை உலகுக்கு, அழைத்து செல்ல போகிறேன்.
நான்கு திட்டங்கள் நமக்கு அமல்படுத்த பட்டு இருந்தால், புதுச்சேரி எப்படி இருக்கும். உங்கள் முடிவுக்கு விட்டு விடுகிறேன்.
- மாநில தகுதி.
- மத்திய திட்டக் குழுவால் உருவான, புதுச்சேரி முன்னேற்ற அறிக்கை.
- சிறப்பு பொருளாதார மண்டலம்.
- ஸ்மார்ட் சிட்டி திட்டம்.
இந்த நான்கு திட்டங்களும், குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கப்பட்டு. இருந்தால். புதுச்சேரி மாநிலம், இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாறியிருக்கும்.
ஆனால் இப்போது எப்படி இருக்கிறது?
வட இந்திய அதிகாரிகளின், வேட்டை காடாக மாறியிருக்கிறது. அதிகாரத்தை குவித்து வைத்து, ஆட்சியாளர்கள் சுயநல அரசியல் நடத்துகின்றனர்.
- புதுச்சேரி குப்பை மேடாக காட்சி அளிக்கிறது.
- சுற்றுலா வளர்ச்சி என்ற போர்வையில். விபச்சார விடுதியாக மாறுகிறது.
- கலாச்சார சீரழிவால் சட்டம் ஒழுங்கு கெடுகிறது.
- ஆட்டம், பாட்டம், குடி, கும்மாளம்,
இவைகள்தான், புதுச்சேரி மக்கள் நிம்மதியாக வாழமுடியாத சூழ்நிலை.
மக்களின் வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாகி விட்டன. ஆட்சியாளர்களே! மக்களே! இனிமேலாவது தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள்.
நமது தேடுதலை அரிக்க மேடுவிலிருந்து ஆரம்பிப்போம்.
இந்த பதிவு இத்துடன் முடிகிறது. நன்றி.
ஆம் ஆத்மி கட்சியின் மக்களுக்கான விழிப்புணர்வு பதிவு.
தொகுப்பு.
திரு. கோ. ராமலிங்கம்.
செயற்குழு உறுப்பினர்.
ஆம் ஆத்மி கட்சி.
புதுச்சேரி.
பதிவேற்றம்.
திரு. எம்.எம்.ஒய். ஹமீது.
மாவட்ட தலைவர்.
ஆம் ஆத்மி கட்சி.
காரைக்கால்.